தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. சாலைப் போக்குவரத்தில் நிகழும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இந்த வார விழாவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டுவருகிறது. இதில், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனியில் நடைபெற்ற 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், காவல் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாணவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு செய்யும் மாணவிகள் திருச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர். காஞ்சிபுரத்தில் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் போக்குவரத்து துறை ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பெரியாருக்கு எதிரான ரஜினியின் போர் வெல்லுமா?
அதேபோன்று, விருதுநகர், தூத்துக்குடி, பெரம்பலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், இளைஞர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.