திருச்சி: திருச்சி கவுன்சிலர் ரேசில் களம் இறங்கி இருக்கும் மூவர் வெயிட் பார்ட்டிகளாகவுள்ளனர். அவர்கள் மதிவாணன், சேகரன், அன்பழகன் ஆவர்.
மாநகராட்சி தேர்தல்
மதிவாணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உறவினர். மலைக்கோட்டை பகுதிச்செயலாளராக உள்ளார். 16ஆவது வார்டில் நிற்கிறார்.
சேகரன், திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. (இரண்டுமுறை). இவர் ஏன் கவுன்சிலருக்கு நிற்கிறார் என்றால் கண்ணைச் சிமிட்டுகிறார்கள், திமுகவினர். இவரின் ஆதரவாளர்கள் கடந்த சில பல ஆண்டுகளாக கே.என்.நேருவையேச் சுற்றி வந்தவர்கள். சேகரன், அன்பழகன் இடத்தைப் பிடிக்க முடியாததால், தன் இனத்தைச்சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார். 40வது வார்டில் கவுன்சிலருக்கு நிற்கிறார்.
அன்பழகன், அமைச்சர் நேருவின் வலதுகை. திருச்சி மாமன்றத்தின் முன்னாள் துணைமேயர். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்களே... அப்படி ஒரு பெருமை இவருக்குக் கட்சியில்... மீண்டும் இவர் கோதாவில் இறங்கி இருக்கிறார். இவருடைய வழக்கமான வார்டு 55. அந்த வார்டு ஏற்கெனவே மற்றொருவருக்கு ஒதுக்கப்பட இப்போது இவர் நிற்பது 27ஆவது வார்டாக உள்ளது.
திமுகவிற்கு திருச்சி கிட்டுமா
மூவருக்கும் வேறு வேறு எண்ணங்கள் இருந்தாலும் நிற்கும் வண்ணம் என்னமோ கறுப்பு சிவப்புதான்.
ஒரே ஒரு ஒற்றுமை மூவரும் ஒரே இனத்தைச்சார்ந்தவர்கள். வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல் என வலம் வருகிறார்கள், மலைக்கோட்டை மாநகரைச் சுற்றி...
இன்னும் இதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும்!
இதையும் படிங்க: திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பாதாளச்சாக்கடை கோரிய வழக்கு - மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு