சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் - ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம்
திருச்சி: விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்
அப்போது சென்னையைச் சேர்ந்த பட்டூர் ஜமான் என்பவர் தனது சூட்கேசில் 450 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 17 லட்சத்து 15 ஆயிரத்து 292 ரூபாயாகும்.
மொத்தம் ஒன்பது தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், ஜமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.