தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயிரத்து 875 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
திருச்சியில் மேலும் 10 பேருக்கு கரோனா! - தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
திருச்சி: மாவட்டத்தில் இன்று (ஜூன் 11) ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
10 பேருக்கு கரோனா தொற்று
இந்நிலையில், திருச்சியில் இன்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் தில்லைநகர், அரியமங்கலம், கல்லக்குடி, புங்கனூர், நடுவலூர், துறையூர், நங்கநல்லூர், சமயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இன்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.