திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பொன்முச்சந்தியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் மோத்தபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெகநாதன்(18) என்பவரை சோதனையிட்டபோது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், வட்டாசியர் லஜபதிராஜிடம் ஒப்படைத்தனர்.
மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்ய சென்றவரிடம் ரூ.1.31 லட்சம் பறிமுதல் - Manapparai
திருச்சி: மணப்பாறை அருகே உரிய ஆவணமின்றி இளைஞர் எடுத்துச் சென்ற 1.31 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
1.31 lakh seized from a person who went to buy groceries in Manapparai
அதைத் தொடர்ந்து அலுவலர்கள் ஜெகநாதனிடம் நடத்திய விசாரணையில், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள மளிகை கடைக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக வீட்டிலிருந்து பணத்தை எடுத்துச்சென்றதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மணப்பாறையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்