துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இதில் பயணம் செய்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி முகமது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அசாருதீன் இருவரது உடமைகளையும் விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் ஜீன்ஸ் பேன்ட்டில் வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரிடமிருந்தும் இரண்டரை கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - திருச்சி நகரச் செய்திகள்
திருச்சி : விமான நிலையத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான 2.5 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1.25 crore worth of smuggled gold seized at Trichy airport
இதன் மதிப்பு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத் துறையினர் கைது செய்தனர்.