அவிநாசி, குப்பாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - பூங்கோடி தம்பதியினர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி பூங்கொடியின் வீட்டருகே கோழி கழிவுகளை கொட்டியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த பூங்கொடி ரத்தினசாமியிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அத்திரமடைந்த ரத்தினசாமி பூங்கொடியை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, கொலை முயற்சியிலும் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.