கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு ஆறு மாத காலத்திற்கான தவணைத் தொகையை செலுத்த விலக்கு அளித்தது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மத்திய அரசின் அறிவிப்பை கருத்தில் கொள்ளாமல், அக்குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு, வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்து வந்தனர்.
மேலும், அவ்வாறு செல்லும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் தரக்குறைவாக பேசியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கீழ்த்தரமான வார்த்தைகளால் மிரட்டியும் வந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து 20 முறைக்கு மேல் மனு அளித்தனர்.