திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தை நடத்திவருபவர் சுரேஷ். அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் சிலர் நன்கொடை கேட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது பத்தாயிரம் ரூபாய் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் சுரேஷ் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. அங்கேரிபாளையம் பகுதியில் விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்த இந்து முன்னணியினரில் சிலர் அத்துமீறி பின்னாலாடை நிறுவனத்திற்குள் புகுந்து காவலாளியை தாக்கியுள்ளனர்.