தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இறந்த எருமை மாட்டை ஊருக்குள் எறிந்து சென்ற மர்ம நபர்கள்! - Unidentified person through the Dead buffalo in village

பொள்ளாச்சி: இறந்த எருமை மாட்டை  ஊருக்குள் எறிந்து சென்ற  மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இறந்த எருமை மாட்டை ஊருக்குள் எரிந்து சென்ற மர்ம நபர்கள்!

By

Published : Apr 27, 2019, 11:45 PM IST

பொள்ளாச்சி அருகே காளியப்ப கவுண்டன் புதூர் கிராமத்தில், ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இறந்து அழுகும் நிலையில் உள்ள மாட்டை மர்மநபர்கள் சிலர் வீசிவிட்டு சென்றனர்.

இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த மக்கள்தாலுக்கா காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இறந்த மாடுகளை யார் இங்கு எறிந்தது என்று விசாரணை நடத்துவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த மாட்டை புதைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

cow died

ABOUT THE AUTHOR

...view details