தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் கயல்விழி செல்வராஜை ஆதாித்து, தாராபுரம் காவல் நிலையம் அருகே திமுக இளைஞா் அணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி, “நான் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறேனோ, அதைவிட ஆயிரம் வாக்குகள் அதிக வி்த்தியாசத்தில் கயல்விழி செல்வராஜை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மோடி உங்கள் மீதும் மட்டுமல்ல, என் மீதும் கோவத்தில் உள்ளாா்.
மூத்தவா்களை ஓரங்கட்டி குறுக்கு வழியில் பிரதமா் ஆன இந்த மோடி, தாராபுரத்தில் பேசும்போது குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவன் என என் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் முதல்வராக வர எத்தனை பேரை இவர் ஓரங்கட்டிவிட்டு வந்தார் தொியுமா? அத்வானியை பின்னுக்குத் தள்ளி, சுஷ்மா சுவராஜை சாகடித்து பிரதமர் ஆனவர் மோடி. சசிகலாவின் காலை பிடித்து குறுக்கு வழியில் முதல்வரானவர் பழனிசாமி.