திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் காணிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலன்(41), கூலி தொழிலாளி. இவர், கடந்த 2016 ஏப்ரல் 30ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து குண்டடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அதே ஊரைச் சேர்ந்த முருகன் (53) மற்றும் முருகனின் தம்பி தண்டபாணி (48) ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக பாலனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆனந்தன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, குற்றவாளிகள் இருவருக்கும், ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் ரூ.10 ஆயிரத்தைக் கட்ட தவறினால், மேலும் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை!