திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தனியார் மண்டபத்தில், நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மாவின் உண்மையான ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொடுக்க, ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் அமமுக. சின்னம்மா வெளியே வந்ததும், நாங்கள் பொதுச்செயலாளர் ஆக்கிவிடுவோம், டிடிவியை சேர்க்க மாட்டோம் என்கின்றனர்.
‘டிடிவி என்றால் பயம்’ - நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் மாஸ் பேச்சு! - ammk party latest news
திருப்பூர்: டிடிவி என்றால் பயம் என அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் திருப்பூர் பேட்டி
டிடிவி தினகரன் திருப்பூர் பேட்டி
'பயம் டிடிவி என்றால் பயம்' என்ற தினகரன், சின்னம்மா சிறைக்குச் சென்று மூன்று ஆண்டுகள் ஆகிறது, இன்னும் யாரும் சென்று பார்க்க வில்லை என்றார். மேலும் பேசிய அவர், “அம்மாவின் தொண்டர்களை அவமதித்தவர்களுடன் சின்னம்மா சேரமாட்டார். தொண்டர்கள் இருக்கும் வரை டிடிவியை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் ஆணையம் நமது கட்சியை அங்கீகரித்து சின்னம் வழங்கும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிடுவோம்” என சூளுரைத்தார்.