மத்திய அரசின் 2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தற்போது வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை உற்சாகம் அளிக்கக்கூடிய வகையில் இல்லாவிட்டாலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் 7 ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளித்து இருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதில் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஜவுளிப் பூங்கா வர இருப்பது மகிழ்ச்சியானது” எனத் தெரிவித்தார்.