உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் சூழ்நிலையில், கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு, 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் சாலையில் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இதனால் ஊரடங்கை கடைபிடிக்ககோரி மக்களிடம் எடுத்துக் கூறியும், கேட்காமல் ஊர் சுற்றும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமின்றி, தங்கள் பாணியில் அவர்களுக்கு சிறப்பு கவனிப்பையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரின் எல்லை பகுதியான ஈரோட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஐ தொட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லை பகுதியாக உள்ள நொய்யல் ஆற்றை கடந்து வர உள்ள அனைத்து கிராமப்புற சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.