தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேட்புமனு நிராகரிப்பு- முன்னாள் ராணுவ வீரர் தர்ணா! - திருப்பூர் மக்களவைத் தொகுதி

திருப்பூர்: தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் செல்வராமலிங்கம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

tirupur

By

Published : Mar 29, 2019, 2:32 PM IST

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முன்னாள் ராணுவ வீரர் செல்வராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும், பரிசீலனையின்போது தனக்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லை என்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செல்வராமலிங்கம் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தூத்துக்குடியில் கனிமொழி, தமிழிசை ஆகியோரது வேட்புமனுக்கள் நேரமெடுத்து பெறப்படும்போது தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி, தமிழிசை ஆகியோரின் மனு நிராகரிக்க வேண்டும் அல்லது எனது மனுவை ஏற்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்திருக்கிறேன்' என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details