நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்தும் கட்சி குறித்தும் பல்வேறு விளக்கங்களை அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் - ரவிக்குமார்! - ரஜினிகாந்த்தின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்
திருப்பூர்: ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம், அவருடைய கருத்துகளை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்து தெளிவு ஏற்படுத்துவோம் என திருப்பூர் ரஜினிகாந்த் மன்ற மாநகர செயலாளர் ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார்.
இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ரஜினிகாந்த் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரவிக்குமார்,
"ரஜினிகாந்த் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுதுணையாக இருப்போம். அவரது கருத்துகளை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்து தெளிவு ஏற்படுத்துவோம். இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சியை அமைக்கும் இடத்தில் ரஜினிகாந்த் கட்சி பிரவேசம் எடுத்துள்ளார். அவருக்கு திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆதரவளித்து கடுமையாக பணியாற்றுவோம்" என தெரிவித்தார்.