திருப்பூரில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் தினசரி சந்தை பகல் நேரங்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டு, விற்பனையை இரவு நேரமாக மாற்றப்பட்டது.
இரவு மார்க்கெட்டை பகல் நேரத்தில் திறக்கக்கோரி விவசாயிகள் மனு! - tiruppur farmers petition
திருப்பூர்: தென்னம்பாளையத்தில் இரவு நேரம் இயங்கும் தினசரி சந்தையை பகல் நேரத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சார்பில் திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Farmers petition
இதனிடையே தற்போது அரசு சார்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பனியன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முழு நேரம் செயல்படும் நிலையில், தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக அளவு வராததால், விற்பணைக்கு எடுத்து வரும் பொருள்கள் தேங்கி நஷ்டமடைவதால், இரண்டு நாள்களுக்கு தினசரி காய்கறி சந்தை பகல் நேரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி விவாசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.