தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடமாநில பெண்னை கொலை செய்த சிறுவன் போலீஸில் ஒப்படைப்பு.! - North indian Girl Murder

திருப்பூரில்: வடமாநில பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றதாக 14 வயது சிறுவனை காவலர்கள் கைதுசெய்தனர்.

Thiruppur North indian Girl Murder திருப்பூர் வடமாநில பெண் கொலை வடமாநில பெண் கொலை North indian Girl Murder Thiruppur Girl Murder Suggested Mapping : state
Thiruppur North indian Girl Murder

By

Published : Mar 1, 2020, 7:55 AM IST

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன்தாதியா. இவரது மனைவி ஷீலாதேவி. இவருக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்கள் திருப்பூர் கொடி கம்பம் வ.உ.சி நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மிதுன்தாதியா தன் சொந்த ஊரான பிகாருக்கு தன் குழந்தையுடன் சென்றுவிட்டார்.

இதனால் ஷீலாதேவி தற்போது தனியாக வசித்து வருகிறார். மிதுன்தாதியாவின் தம்பிகள் இரண்டு பேர் அருகேயுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுடன் மேற்படி 14 வயது சிறுவனும் வசித்து வந்துள்ளான். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மது அருந்தி விட்டு ஷீலாதேவியின் வீட்டிற்குச் சென்ற 14 வயது சிறுவன் பேச்சுக் கொடுத்து அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

பெண் கொலை

ஷீலா தேவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கேயே உறங்கிவிட்டார். இதனிடையே, தன் மனைவிக்கு செல்ஃபோனில் அழைத்த போது எடுக்காததால் சந்தேகம் அடைந்த மிதுன்தாதியா அருகில் உள்ள தன் தம்பிக்கு செல்ஃபோனில் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மிதுன் தாதியாவின் தம்பிகள் அங்கு சென்று பார்த்த போது, ஷீலா தேவி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

அங்கிருந்து தப்பிக்க முயன்ற 14 வயது சிறுவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:தீபாவளி சீட்டு மோசடி: பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளி மாநிலத்துக்கு ஓட்டம் பிடித்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details