திருப்பூரில் மடத்துக்குளம் வட்டம் கடத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், காந்திபுரம் நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கோவிந்தசாமி (30).
இவர் காந்திபுரம் பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி அதே பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது ஏறி புதிதாக அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்தில் தொங்கிய நபர் அப்போது தானியங்கி தெரு விளக்கு பவர் சப்ளை கொடுத்தபோது காந்திபுரம் பகுதியில் கம்பத்தின் மேல் இருந்த கோவிந்தசாமி உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தலைகீழாக தொங்கியபடி அலறி சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்த பொதுமக்கள் மின்கம்பத்தில் ஏறி உயிருக்கு போராடிய நிலையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த கோவிந்தசாமியை உடனடியாக பெட்ஷீட் விரித்து காப்பாற்றினர்.
பின்னர் கோவிந்தசாமியை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தெரிந்து வந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவிடும் தம்பதி!