திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றன.
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன்? அதனால் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.