தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மடிக்கணினியை கொடுங்கள்!' - பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து திரண்ட மாணவிகள்! - Students protest for free laptop

திருப்பூர்: மடிக்கணினி வழங்காத பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து ஏராளமான மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Students protest for free laptop, மடிக்கணினி போராட்டம்
Students protest for free laptop

By

Published : Dec 16, 2019, 4:32 PM IST

திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இதனிடையே 2016, 2017, 2018, 2019ஆம் கல்வியாண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த 1500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் இதுவரை மடிக்கணினி வழங்காமல் காலம் கடத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் ஏராளமானோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிகளில் திருடுபோன மடிக்கணினிகள் எத்தனை? - கணக்கு கேட்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் பேசி உடனடியாக மடிக்கணினி வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்துசென்றனர்.

இலவச மடிக்கணினிக்காக பள்ளியின் முன் திரண்ட மாணவிகள்

ABOUT THE AUTHOR

...view details