தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழப்பு - அமராவதி ஆற்றில் மாணவர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tirupur river deaths
tirupur river deaths

By

Published : Jan 18, 2022, 12:43 AM IST

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பினர். அவர்கள் வரும் வழியில் தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது ஒருவர் நீரில் மூழ்கவே, அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக 8 பேர் ஆழமான பகுதிக்கு சென்றனர். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முதல்கட்ட தகவலில், உயிரிழந்தவர்களின் பெயர் அமிர்தகிருஷ்ணன், சக்கரவர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் என்பதும், இதில் ஐந்து பேர் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

ABOUT THE AUTHOR

...view details