திருப்பூர்:தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக, அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், விவசாய சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் கூடிய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடர் காத்திருப்பு போராட்ட பந்தலில் நடைபெற்றது.
திருப்பூர் உப்பாறு விவசாய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல கட்சிகளின் தலைமை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உப்பாறு அணையில் தண்ணீர் திறக்க கோரி அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி கலந்துகொண்டனர். இக் கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.