தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மளிகை சாமான்கள் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு - relief rice, groceries to the Northern state workers - Tirupur District Administration

திருப்பூர் : மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரிசி, மளிகை சாமான்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

வடமாநில தொழிலாளர்களுக்கு மளிகை சாமான்கள் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
வடமாநில தொழிலாளர்களுக்கு மளிகை சாமான்கள் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

By

Published : May 3, 2020, 11:32 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல முடியாத அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏற்கெனவே அரிசி, மளிகை சாமான்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு மீண்டும் மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டாம் கட்டமாக அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கணக்கெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் பகுதி வாரியாகப் பிரித்து, பொருட்களைக் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மளிகை சாமான்கள் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

இந்தப் பொருட்கள் 90,000 வடமாநிலத் தொழிலாளர்களை சென்றடையும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

உணவு மறுக்கப்படட் அவலம்: சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்துவந்த தொழிலாளர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details