திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது.
வருடந்தோறும் இந்த கோயிலில் சித்திரை மாத திருவிழா 2 வாரம் நடைபெறும். இந்த திருவிழாவை ஆண்டிபாளையம் சின்னண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
இந்த நிலையில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் 11.60 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகர காவல்துறை 2013 முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.