தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்! - LOVERS WERE THREATENED BY PARENTS

திருப்பூர்: பெற்றோர் அடியாட்களுடன் வந்து மிரட்டுவதால் உயிருக்கு பயந்து ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியினரால் சலசலப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்...

By

Published : Jun 14, 2019, 11:39 AM IST

திருப்பூர் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவரும், சேலம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த மணிமாறனும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்துவந்தனர். இந்த நிலையில் கார்த்திகா, மணிமாறன் இருவரும் நண்பர்களாகப் பழகிக் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்துவந்தனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்தது.

கார்த்திகாவும், மணிமாறனும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் அவருக்கும் வேறு திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துவந்தனர்.

பாதுகாப்புக் கேட்டு காதல் ஜோடி ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்...

இந்நிலையில் இருவரும் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறி, சேலம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகள் பெருமாள் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பெண்வீட்டார் இவர்களின் திருமணத்தை ஏற்காமல் கொலை மிரட்டல் விடுத்ததால் இருவரும் பாதுகாப்பு கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இவர்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரியப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததை அடுத்து தம்பதியி நிம்மதியாகத் திரும்பிச் சென்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details