தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

824 குளங்களை தூர்வாரும் முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை சுற்றி அமைந்திருக்கும், கிராமங்களில் இருக்கும் 824 குளங்களை தூர் வாருவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தூர் வாரும் பணிகள்

By

Published : Aug 12, 2019, 7:51 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களில் இருக்கும் குளங்களைத் தூர் வாருவதற்காக பணிகள் தொடங்கியுள்ளன. இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில், 824 குளங்கள் மட்டும் முதற்கட்டமாகத் தூர்வாரப்படுகின்றன. இவற்றைத் தூர் வாருவதற்கு ரூ.24.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தூர்வாரும் பணிகளை பார்வையிட்டபோது

இந்நிலையில் இன்று குடிமங்கலம், பெரியபெட்டி போன்ற கிராமங்களில் அமைந்திருக்கும், குளங்கள் தூர்வாரும் பணியைத் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இந்த குடிமராமத்துத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருப்பதைப் பார்த்து, தெலங்கானா மாநிலமும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், தமிழ்நாடு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details