திருப்பூர் யூனியன் மில் சாலையில் மக்கள் நீதி மையத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று (மார்ச்’18) நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி மற்றும் பல்லடம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”ஒரு ஊழல் ஆட்சியை அகற்ற, இன்னொரு ஊழல் ஆட்சியை அமர வைக்கக்கூடாது. நேர்மையான ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
எம்ஜிஆரின் தம்பி நான்! - மநீம தலைவர் கமல் ஹாசன்! - கமல் ஹாசன்
திருப்பூர்: தன்னை இந்த கொடுங்கோல் ஆட்சியின் கீழ் மீண்டும் வாழ வைத்து விடாதீர்கள் என திருப்பூரில் நடைபெற்ற மநீம பிரச்சார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
துளிர்த்து மரமாகும் என எம்ஜிஆர் இரட்டை இலையை விட்டுச் சென்றால், அதனை இரண்டு பேர் மட்டுமே சாப்பிடும் விருந்து இலையாக்கிவிட்டனர். என்னை எம்ஜிஆர் குறித்துப் பேசக்கூடாது என்கின்றனர். நல்லது செய்ய விரும்பும் யாரும் எம்ஜிஆரை பற்றி பேசலாம். குறிப்பாக அவருடைய தம்பி நான் பேசுவேன். மக்கள் நீதி மைய ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு, தரமான கல்வி, உயர் தர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம். எனவே, வசதியாக வாழ வைத்த என்னை, கௌரவமாகவும் வாழ வையுங்கள். இந்த கொடுங்கோல் ஆட்சியில் மீண்டும் வாழ வைத்து விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'உங்க பின்னாடியே வரணுமா' - கமலிடம் பெண் எழுப்பிய கேள்வி