தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தங்க கடத்தல் விவகாரம் - மூவரை கடத்திய கும்பல் கைது

திருப்பூரில் தங்க கடத்தல் விவகாரத்தில் கார் ஓட்டுநர் உள்ளிட்ட மூவரை கடத்திய கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

கடத்தல் கும்பல் கைது
கடத்தல் கும்பல் கைது

By

Published : Aug 30, 2021, 2:05 AM IST

திருப்பூர்: பல்லடம் பகுதியில் கடந்த 26ஆம் தேதி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாண்ட்ரோ காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சக்தி என்பவரை, அடையாளம் தெரியாத மூன்று பேர் காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து சாண்ட்ரோ காரில் இருந்த பாக்கியா என்பவர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டன.

மூவர் கடத்தல்

விசாரணையில், சக்தி ( எ ) மகேஷ்வரனை கடத்துவதற்காக, அவரது நண்பர்களான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணிகண்டன், அழகர்சாமி ஆகிய இருவரை ஏற்கனவே கடத்தி, அவர்களை சைலோ காரில் வைத்து அழைத்து வந்ததுள்ளனர்.

மகேஷ்வரனுடன் சேர்ந்து கடத்தப்பட்ட மூன்று பேருடன் கடத்தல்காரர்கள் கீரனூர் பகுதியில் மேல்கரைபட்டி காட்டுப்பகுதியில் மறைந்திருந்துள்ளனர். அப்போது, கடத்தப்பட்ட மூவரும் கடந்த 27ஆம் தேதி காலை அங்கிருந்து தப்பித்து வந்துள்ளனர்.

இந்நிகழ்வு சம்மந்தமாக கடத்தப்பட்ட மூவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மகேஷ்வரன் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக கட்சியின் விவசாய அணி செயலாளரான குட்லக் ராஜேந்திரன் என்பவரிடம் வேலை செய்து வந்தவர் என்றும் இலங்கையிலிருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வரும் குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை

கடந்த ஒரு வருடத்திற்கு முன் தங்க பிஸ்கட் பரிவர்த்தனையின் போது மகேஷ்வரன் ஐந்து கிலோ தங்க பிஸ்கட்டை இலங்கையிலிருந்து கடத்தி வந்தபோது, ராமநாதபுரம் பகுதியில் சில நபர்கள் துரத்தியதால் தங்கபிஸ்கட்டை விட்டுவிட்டு மகேஷவரன் மட்டும் தப்பி வந்து குட்லக் ராஜேந்திரனிடம் சம்பவத்தை தெரிவித்ததாகவும், ஆனால் குட்லக் ராஜேந்திரன் அதை ஏற்காமல் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் குட்லக் ராஜேந்திரனிடம் இக்கடத்தல் பணிக்காக முதலீடு செய்த யாசர் அராபத், முகம்மது ரிஸ்வான் என்பவர்கள் குடலக் ராஜேந்திரனிடம் , தங்க பிஸ்கட்டை கேட்டதை தொடர்ந்து மகேஷ்வரனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் ஒருவார காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகேஷ்வரன் அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.

தொடர்ந்து திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக தங்கி வந்ததும் காவல் துறையின் விசாரனையில் தெரியவந்தது. மகேஷ்வரனிடமிருந்து தங்க பிஸ்கட்டுகளை வாங்குவதற்கு முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் குட்லு , அன்பு, கார்த்தி, பாண்டி கோவையில் பணி புரிந்து வரும் காவலர் ராஜேஷ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது

மகேஷ்வரனை கடத்தும் நோக்கில், முதலில் மகேஷவரனின் இருப்பிடம் அறிந்த அவரது நண்பர்கள் வீரமணிகண்டன், அழகர்சாமி ஆகியோரை கடந்த 25ஆம் தேதி கடத்தி அவர்களிடம் மகேஸ்வரன் பற்றி விசாரித்து, பின்னர் கடந்த 26ஆம் தேதி மகேஷ்வரனை பல்லடத்தில் வைத்து கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் , கோவை மாநகரில் பணிபுரியும் காவலர் ராஜேஷ்வரனையும் கைது செய்த காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய சைலோ, ஆடி காரையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் கும்பல் கைது

சில கடத்தல் குற்றவாளிகளை கைது செய்ய இருக்கும் நிலையில், தங்க கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணையையும் மேற்கொள்ள திருப்பூர் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாஜக கட்சியின் விவசாய அணி செயலாளரான குட்லக் ராஜேந்திரன் என்பவர் மீது ஏற்கனவே தங்கம் கடத்தல் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு

ABOUT THE AUTHOR

...view details