தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேஸ் விலை உயர்வு, பாஜக அதிமுக அரசுகளின் தோல்வி! - உதயநிதி கண்டனம்! - திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

திருப்பூர்: தொடர்ந்து ஏறும் கேஸ் விலை என்பது மத்திய மாநில அரசுகளின் தோல்வியை காட்டுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

stalin
stalin

By

Published : Feb 15, 2021, 1:07 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு, நேற்றிரவு ஒட்டன் சத்திரம் வழியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் வந்தார். அவருக்கு புறவழிச்சாலையில் உள்ள கல்லூரி அருகே அககட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திமுக இளைஞர் அணியினருடன் ஆலோசனை நடத்திய ஊதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் தொடர்ந்து கேஸ் விலை மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது மத்திய மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

கேஸ் விலை உயர்வு, பாஜக அதிமுக அரசுகளின் தோல்வி! - உதயநிதி கண்டனம்!

இதையும் படிங்க: எங்களுக்காக ஐ பேக் பாடுபடுகிறது: கே. என். நேரு

ABOUT THE AUTHOR

...view details