தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருப்பூரில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்? - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு - Examinations for 10th standard students in Tiruppur

திருப்பூர்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனியார் பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Inspection of District Primary Education Officer
Inspection of District Primary Education Officer

By

Published : Jun 21, 2020, 3:58 AM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகம் வழங்குவதற்காக, காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் அப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விடைத்தாள்கள் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வுகள் மேற்கொண்டு மாணவர்களின் முந்தைய காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடு ஏதும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details