திருப்பூர்:தேமுதிக மற்றும் அமமுக கட்சிகள் துரோகத்தால் வெளியேற்றப்பட்டு, தற்போது மக்கள் நலனுக்கான கூட்டணியை அமைத்துள்ளதாக திருப்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக - அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து அனுப்பர்பாளையம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மக்கள் வேட்பாளர்களை பார்த்து கேள்வி கேட்பார்கள். ஆனால் தேமுதிக மட்டும்தான் மக்களைப் பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு கட்சியை நல்லபடியாக கேப்டன் வளர்த்திருக்கிறார்.
கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுத்த கேப்டன்
தேமுதிக, எங்கள் கட்சியால் வெற்றி பெற்றவர்கள் இதுவரை எதேனும் தவறு செய்திருப்பதாக உங்களால் ஒரு குறையாவது சொல்ல முடியுமா? 2011இல் அதிமுக - தேமுதிக கூட்டணி என்ன பிரச்சினை தெரியுமா. பால் விலை, பஸ் டிக்கெட் விலை பற்றி கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்காக கேள்வி எழுப்பினார்.
துரோகத்தால் வெளியேற்றப்பட்ட தேமுதிக - அமமுக