திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், பின்னலாடை உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாத பொருளாக எலாஸ்டிக் இருந்துவருகிறது.
கடந்த சில மாதங்களாக எலாஸ்டிக் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களுக்கான விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.180ஆக இருந்த ரப்பர் தற்போது ரூ.350ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுபோல் லைக்ரா ரூ.400ல் இருந்து ரூ.750 வரை உயர்ந்துள்ளதாகவும், பாலியஸ்டர் நூல் ரூ.80ல் இருந்து ரூ.125ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் ரப்பர் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில் குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு ஒரு முறை ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ரப்பர் விலை சீராக இருக்க கேரளாவில் ரப்பர் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைப்பது, கட்டுப்பாடு போகும் வரையில் ரப்பரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் 5 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருப்பூர் ஆட்சியர் அலுவலத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயற்சி!