தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2019, 5:28 PM IST

ETV Bharat / city

அமராவதி அணைக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர், கரூர் பாசனப் பகுதிகளின் வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணைக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Edappadi palaniswami on water release

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து எட்டுப் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக, இந்த மாதம் வரும் 20ஆம் தேதி முதல் 2020 ஜனவரி 18ஆம் தேதி வரை 1944 மில்லி கன அடி அளவு நீருக்கு மிகாமலும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பத்துப் பழைய ராஜவாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் நான்காம் தேதி வரை 3110 மில்லி கன அடி நீருக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பிரதானக் கால்வாய் மூலம் பாசனம்பெறும் புதிய பாசனப் பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 4 வரை 1711 மில்லி கன அடி அளவு நீருக்கு மிகாமலும், ஆக மொத்தம் 6,725 மில்லி கன அடி அளவு நீருக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

மேலும் இதன் மூலம் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலம் பயனடையும் என்றும், பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details