வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். அதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், இன்று (டிச. 05) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து திருப்பூரில் கருஞ்சட்டை அணிந்து 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முற்படவே, காவலர்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.