தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, வெத்து நடை தான் போடுகிறது' - ஸ்டாலின் விமர்சனம் - முதலமைச்சரை விமர்சித்த ஸ்டாலின்

திருப்பூர்: பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, வெத்து நடை தான் போடுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

'டாலர் சிட்டி'யாக இருந்த திருப்பூர் அதிமுகவால் 'டல் சிட்டி'யானது - ஸ்டாலின்
'டாலர் சிட்டி'யாக இருந்த திருப்பூர் அதிமுகவால் 'டல் சிட்டி'யானது - ஸ்டாலின்

By

Published : Feb 21, 2021, 2:30 PM IST

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியின் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " திருப்பூர் நகரம் ஒரு காலத்தில் டாலர் சிட்டி ஆக இருந்தது. தற்போது டல் சிட்டி ஆக உள்ளது. அதிமுக பெயரில் மட்டுமே அண்ணாவை வைத்துக்கொண்டு அவரின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது.

டெபாசிட் கூட கிடைக்காது:

அராஜகத்தில் ஈடுபடும் அதிமுகவின் ஊராட்சி பிரதிநிதிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், தேர்தல் காரணமாக மக்களை ஏமாற்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அவிநாசி தொகுதியில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் சபாநாயகர் தனபால் வரும் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட போவதாக கேள்விப்பட்டேன்" என்று விமர்சித்தார்.

திருப்பூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி

முதலமைச்சரா? மந்திரிவாதியா?

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக சொல்லும் அனைத்தும் மாயாஜாலம் தான். அவர் முதலமைச்சரா இல்லை மந்திரிவாதியா, உள்கட்டமைப்பாக சொல்லப்பட்ட எந்த திட்டங்களையும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

வெற்றி நடை இல்லை; வெத்து நடை

தொடர்ந்து பேசிய அவர், "ஊழலின் சரணாலயமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டார் பழனிசாமி. அத்திக்கடவு அவிநாசி திட்டம் இவர்கள் ஆட்சியில் தொடங்கப்பட்டது அல்ல. திமுக ஆட்சி அமைந்ததும் முழு திட்டமும் செயல்படுத்தப்படும். பொய்கள் சொல்வதில் பழனிசாமிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். வெள்ளை அறிக்கை கொடுக்க வக்கற்றவராக இருக்கிறார். பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை. வெத்து நடை தான் போடுகிறது" என்று சாடினார்.

ABOUT THE AUTHOR

...view details