தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவிற்கு மாற்று திமுக அல்ல; இரண்டுமே ஏமாற்று!

திருப்பூர்: அதிமுகவிற்கு மாற்று திமுக அல்ல இரண்டுமே ஏமாற்று என தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman
seeman

By

Published : Mar 26, 2021, 7:45 PM IST

Updated : Mar 26, 2021, 8:04 PM IST

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புஷ்பா ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ”உலகிலேயே லஞ்சம், ஊழல் அதிகம் நிறைந்த நாடு நைஜீரியா. மற்றொன்று இந்தியா. இரண்டுமே இவிஎம் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிடுவதில்லை. 50 ஆண்டு காலமாக லஞ்சம், ஊழல் செய்து வருபவர்களுக்கே வாக்களித்து வரும் நீங்கள், மாற்றாக ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்.

திமுகவிடம் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவிடமிருந்து திமுகவிற்கும் ஆட்சியை மாற்றுவது மாற்றமல்ல. இரண்டுமே ஏமாற்றம். தமிழகத்தில் இரண்டு கட்சிகளுமே சாராய ஆலைகள் வைத்திருக்கின்றன. சாராயம் விற்பதில் இருவருமே உடன்பாடு செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேலான வடமாநிலத்தவருக்கு குடியுரிமை அளித்திருக்கின்றனர். இதனால் தமிழர்களின் அனைத்து வேலைவாய்ப்புகளும் பறிபோகிறது” என்றார்.

அதிமுகவிற்கு மாற்று திமுக அல்ல; இரண்டுமே ஏமாற்று!

இதையும் படிங்க: இந்தியாவை உடைத்துவிடும்; ஒற்றுமையை சிதைத்துவிடும்!

Last Updated : Mar 26, 2021, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details