தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கையில் கட்டுடன் ஆண்கள்; நாற்றுடன் பெண்கள்' - CPI protest in Tirupur

திருப்பூர்: குண்டும் குழியுமான சாலைகளைச் சீர்செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நூதன முறையில் பெண்கள் நாற்றுநட்டும் ஆண்கள் கையில் காயம் அடைந்தது போன்று கட்டுகள் கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 Struggle to renovate the road in Tirupur
Struggle to renovate the road in Tirupur

By

Published : Dec 7, 2020, 12:19 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட 54ஆவது வார்டு கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழுதடைந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டும் ஆண்கள் கையில் காயம் அடைந்தது போன்று கட்டுகள் கட்டியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details