திருப்பூர் தென்னம் பாளையம் சந்தைப் பகுதியில், ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ரசாயனம் தடவிய பழங்கள்; ஒரு டன் சிக்கியது! - Confiscation of ripe bananas with chemicals
திருப்பூர்: ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழ தார்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
Confiscation of ripe bananas with chemicals
அப்போது கோபியை சேர்ந்த ராசு என்பவரது கிடங்கில், ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் வாழைப்பழம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் அலுவலர்கள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து வாழைப்பழங்களை அழித்தனர். மேலும், பழங்களில் ரசாயனங்கள் தடவியது தொடர்பாக பழ கிடங்கு உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
TAGGED:
ரசாயனம் தடவிய பழங்கள்