திருப்பூர்: சந்தைப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்க் கிருமிக் காரணமாக 108 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் 108 பேர் கோவிட்-19 பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய (ஏப்ரல் 18) தினம் 9 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் 10 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பேட்டி மேலும் 848 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பூரில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் மாநகராட்சியின் நடமாடும் கரோனா பரிசோதனை மையம் மூலம் வீடுகளுக்கேச் சென்று சோதனை மேற்கொண்டு வருவதாகவும், 3 நாட்களில் மட்டும் ஆயிரம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.