தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ. 83 லட்சம் மோசடி: ஒருவர் கைது - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ. 83 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.83 லட்சம் மோசடி செய்த நபர் கைது
தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.83 லட்சம் மோசடி செய்த நபர் கைது

By

Published : Nov 12, 2020, 7:19 PM IST

திருப்பூர் காங்கயம் சாலை ராக்கியாபாளையம் ஜெய் நகரைச் சேர்ந்தவர் வி.இதயசந்திரன். இவர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், "திருப்பூர் மண்ணரை ஊத்துக்குளி சாலை சத்யா காலனியைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்குமார் (40). இவர் எஸ்.எஸ்.எம். சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் உரிய அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

அவரிடம் மண்ணரை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சீட்டுக்கு சேர்ந்து பணம் கட்டி வந்தனர். சீட்டு பணமாக என்னிடம் ரூ. 45 லட்சம், இராம நாராயணன் என்பவரிடம் ரூ. 9.5 லட்சம், சந்திரன் என்பவரிடம் ரூ. 14.83 லட்சம், தங்கமலை என்பவரிடம் ரூ. 15 லட்சம் மற்றும் பலரிடம், இதே போல் பணத் தொகை வசூலித்துள்ளார்.

ஆனால் வசூலித்த தொகையை சீட்டு செலுத்தியவர்களுக்கு தராமல், காலம் தாழ்த்தி வந்தார். சில தினங்களுக்கு முன் திடீரென தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இப்புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் க.கார்த்திகேயன் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் உதவி ஆணையர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்தார். தற்போது காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி, இன்று (நவ.12) மண்ணரை பேருந்து நிறுத்தம் அருகே வைத்து எஸ்.ராஜ்குமாரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன்: மறுப்புத் தெரிவிக்கும் குடும்பத்தார்!

ABOUT THE AUTHOR

...view details