தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கையூட்டுப் பெற்ற பெண் அலுவலர் உள்பட மூன்று பேரை கைதுசெய்த சிபிஐ! - CBI arrested for 3 persons in bribe

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி பெண் அலுவலர் உள்பட மூன்று பேரை சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்.

bribe
bribe

By

Published : Mar 25, 2021, 10:45 PM IST

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் லோகநாயகி. இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தில் வருங்கால வைப்புநிதியில் ஏற்பட்ட முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நான்கு லட்சம் ரூபாய் கையூட்டுக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் லோகநாயகி அலுவலகத்தில் நான்கு லட்சம் ரூபாய் பணத்தோடு இரண்டு நபர்களை சிபிஐ அலுவலர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், சென்னையைச் சேர்ந்த ரமேஷ், சுரேஷ் எனத் தெரியவந்தது.

இருவரும் முறைகேட்டில் ஈடுபட்ட திருப்பூர் நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்று லோகநாயகி இடம் வழங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டது விசாரணையில் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட மூன்று பேரையும் கோயம்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் திருப்பூர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மற்றொரு அலுவலரின் அறையில் சோதனை நடத்தியபோது மூன்று லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் சிபிஐ அலுவலர்கள் தனியாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: விமரிசையாக நடந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details