தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சைப் பாத்திரம் ஏந்திப் போராட்டம்! - BEGGING PROTEST FOR VARIOUS DEMANDS

திருப்பூர்: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சைப் பாத்திரம் ஏந்திக் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிச்சை பாத்திரம் ஏந்தி போராட்டம்!

By

Published : Jun 14, 2019, 11:35 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக பிச்சைப் பாத்திரம் ஏந்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடந்தது. குறிப்பாக ஜெயன் பாளையம் கிராம உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியதற்காகக் காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சைப் பாத்திரம் ஏந்திப் போராட்டம்!

கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு ஒதுக்கீடு வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டை காலதாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் உடுமலை மாவட்டத் தலைவர் திலீப் தலைமையில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details