திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட கோவிந்தாபுரம், சின்னப் புத்தூர், பஞ்சப்பட்டி, சின்னக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பீட்ருட் அறுவடை தொடங்கியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த பீட்ரூட்டை தோட்டத்தில் குவித்து வைத்து விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கிலோ பீட்ரூட் முதல்தரம் கிலோ 7 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பீட்ரூட்களை வியாபாரிகள் தரம் பார்த்து மொத்தமாக கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக மதுரை, கோவை, திருச்சி, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "ஒரு ஏக்கர் பீட்ரூட் நடவு செய்வதற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகும்.
சரிவு பீட்ரூட் விலை சரிவால் விவசாயிகள் வேதனை தற்போது பீட்ரூட் நல்ல விளைச்சல் இருந்தும் சரியான விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே விவசாயிகள் வாழ்வு மேம்படும். இல்லையென்றால் தமிழ்நாடு அரசு பீட்ரூட் பயிருக்கு சராசரியாக குறைந்தபட்ச விலையான 13 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.