திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாடுவதை கண்காணிக்க காவல்துறையினர் தற்போது ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் வடக்கு காவல் துறையினர் கேமரா மூலம் சோதனையில் ஈடுபட்ட போது கும்பலாக நின்று கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், கேமராவை பார்த்ததும் ஓடுவதும் ஒருவர் மட்டும் மீண்டும் வந்து கேரம் போர்டினை எடுத்துச் சென்று கேமராவில் தன் முகம் தெரியாதவாறு மறைந்து உட்கார்ந்து மீண்டும் ஓடுவதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.