தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைமை மருத்துவருக்கு கரோனா - அரசு மருத்துவமனை மூடல்! - அவிநாசி மருத்துவமனை

திருப்பூர்: அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உட்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனை மூடப்பட்டது.

hospital
hospital

By

Published : Sep 28, 2020, 6:47 PM IST

அவினாசி அரசு மருத்துவமனையில் 7 மருத்துவர்கள், 14 செவிலியர்கள், 2 ஆய்வக உதவியாளர்கள், 3 உதவியாளர்கள், 3 மருந்தாளுநர்கள், 2 சுகாதாரப் பணியாளர்கள், ஒரு சமையலர் மற்றும் ஒரு உடற்கூறாய்வு உதவியாளர் என 33 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு கரோனாவிற்கான கண்டறிதல் சோதனைகளும், கரோனா சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று தலைமை மருத்துவர், தலைமைச் செவிலியர், உதவி செவிலியர்கள், சுகாதார ஊழியர் என எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மூன்று நாட்களுக்கு அவிநாசி அரசு மருத்துவமனை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைமை மருத்துவருக்கு கரோனா - அரசு மருத்துவமனை மூடல்!

மேலும், அங்குள்ள இதர பணியாளர்களுக்கும் கரோனா சோதனைக்கான மாதிரிகள் இன்று சேகரிக்கப்பட்டன. மருத்துவமனை மூடப்பட்டதால், அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருவதிலும், கரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்வதிலும் தடை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பூரில் பெரியாரிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details