தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அசாம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது! - palladam gang-raped cas

திருப்பூர்: பல்லடத்தில் அசாம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அசாம் பெண் கூட்டு பாலியல் வழக்கு
அசாம் பெண் கூட்டு பாலியல் வழக்கு

By

Published : Oct 6, 2020, 4:53 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள உகாயனூருக்கு அசாம் மாநிலத்திலிருந்து வேலை தேடிவந்த பெண் ஒருவர் செப்.28ஆம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

அதையடுத்து அப்பெண் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். அதில் ராஜூ, அன்பு , கவின் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மீதம் உள்ள இளந்தமிழன், தாமோதரன், ராஜேஷ்குமார் மூன்று பேர் தேடப்பட்டு வந்தனர். அவர்களில் தாமோதரன், ராஜேஷ்குமார் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது தலைமறைவாக இருந்துவந்த குற்றவாளி இளந்தமிழனை காவல் துறையினர் கைது செய்தனர். அதனால் கோவை சரக டி.ஐ.ஜி நரேந்திரன் நாயர் பல்லடம் காவல் துறைக்கும், தனிப்படையினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதையும் படிங்க:அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வழக்கு: மேலும் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details