தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்தியப் பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 17 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

மத்தியப் பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 17 வயது சிறுமி திருப்பூரில் மீட்கப்பட்டார்.

girl abducted from Madhya Pradesh rescued in Tiruppur 17 year Old girl abducted from Madhya Pradesh rescued in Tiruppur abducted girl rescued in Tiruppur Tiruppur latest news Tiruppur district news சிறுமி திருப்பூரில் மீட்பு மத்திய பிரதேச சிறுமி திருப்பூரில் மீட்பு திருப்பூர் மாவட்ட செய்திகள் சிறுமி

By

Published : Jan 18, 2021, 4:01 AM IST

திருப்பூர்: மத்தியப் பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 17 வயது சிறுமியை மீட்ட காவலர்கள் அவரை உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் பட்டகாடா என்ற பகுதியிலிருந்து கடத்தப்பட்ட 17வயது சிறுமி மற்றும் சிறுமியின் காதலன் ஆகிய இருவரும் திருப்பூரில் இருப்பதாக பட்டகாடா காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் திருப்பூர் வந்த காவலர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசனிடம் உதவி கோரினர். இதன் பேரில், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாத்திமா நகர் சரண் தியேட்டர் அருகில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அவளது காதலன் பிஜேஸை கைதுசெய்தனர்.

இதையடுத்து அவர்களை மத்தியப் பிரதேச காவலர்களிடம் திருப்பூர் காவலர்கள் ஒப்படைத்தனர். திருப்பூர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: 8 வயது சிறுமி மாயம்: துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

ABOUT THE AUTHOR

...view details