தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது - இளைஞர் போக்சோவில் கைது

தஞ்சை: பேராவூரணியில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

14-year-
14-year-

By

Published : Aug 5, 2020, 7:57 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணாநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 14 வயது சிறுவன் வீட்டின் முன்பு தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர், அச்சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கன்னத்தில் அறைந்து மிரட்டி, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் உடல் வலியால் துவண்டுபோன சிறுவன் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பெற்றோரிடம் எதுவும் கூறாமல் மிகவும் சோர்வுடன் இருந்துள்ளான். சந்தேகமடைந்த சிறுவனின் தாய் கேட்டபோது, கதறி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளான்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், சக்திவேலின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் வீட்டிலிருந்தவர்கள் சிறுவனின் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் பேராவூரணி காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

இதனிடையே, சிறுவன் கடந்த மூன்று நாள்களாக ஆசனவாய் பகுதியில் ஏற்பட்ட தாங்கமுடியாத வலியால் துடித்துள்ளான். இதைத்தொடர்ந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details